search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரவி எடுப்பு"

    • திருப்பத்தூர் அருகே கருவேம்பு செல்ல அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங் குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோவில் உள்ளது. இங்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த ஜூன் 20-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தார்களும், தங்கள் கிராமசாமியாடிகளுடன் சூளைக்கு வந்து புரவி களுக்கு மரியாதை செய்தனர். பின்பு சாமியாட்டம் நடந்தது. புரவி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தங்களுக்கு பாத்தியப்பட்ட புரவிகளை தோளில் சுமந்தபடி எட்டரை கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புரவி எடுப்பு விழாவில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி, சந்திரன் பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரகு நாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர்,விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம் பட்டி, காவேரிபுரம் உள்ளி ட்ட எட்டரை கிராமத்தினர் பங்கேற்றனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    • புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.

    நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தேவ ரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எல்கை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்ற பெரிய மாடு களுக்கு தேவரம்பூர் விலக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழு வினரால் நிர்ணயம் செய்யப் பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராம்நாடு, தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் முதல் பரிசாக பரவை நகரத்தைச் சேர்ந்த முத்து தேவருக்கும், 2-ம் பரிசாக பூக்கொள்ளை காளிமுத்துக்கும், 3-வது பரிசை பரளி கிராமத்தைச் சேர்ந்த கேரளா பிரதர்சும் பெற்றனர். நினைவு பரிசை தேவரம்பூர் கிராமத்தை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. அதே போல் சின்ன மாட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதல் பரிசை குண்டேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த கனக வல்லி, 2-ம் பரிசை தேவரம் பூர் கிராமம் ராமநாதன், 3-ம் பரிசை தேவரம்பூர் கிராமம் சுதாகர், 4-ம்பரிசை பொய்கரைபட்டி பாலு ஆகியோருக்கும் விழா குழுவினரால் வழங்கப்பட் டது.

    மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடு களை தேவரம்பூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இப் பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர் களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    • கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேவரம்பூர் கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார் மற்றும் பொன்னரசு கூத்த அய்ய னார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடை பெற்றது.

    முன்னதாக கோவில் முன்பு வைக்கப்பட்ட 5 பதுமைகளுக்கு (குதிரை களுக்கு) வண்ண பலூன், கண்ணாடி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பூஜைகள் மற்றும் தீப ஆராதனை நடந்தது.

    அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதுமைகள் கொண்டுவரப்பட்டு மந்தை கோவில் வீடு முன்பாக அமைக்கப்பட திடலில் வைக்கப்பட்டது. சாரல் மழையில் நனைந்த படி திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்க ளின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • புரவி எடுப்பு விழா நடந்தது.
    • மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.வைரவன்பட்டி மகிழம்பூ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளப்பட்டது.

    புரவி எடுப்பு நாளில் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவிப் பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புரவிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடலில் இருந்து புரவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு 2 பெரிய புரவிகளைத் தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோயில் சென்றடைந்தது. இதில் கே.வைரவன்புட்டி மற்றும் அதன் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
    • சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேலபட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சிபட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்ட னர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×